'அரசுரிமை பாதிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'

'அரசுரிமை பாதிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'

1 mins read
585e1f7c-d359-4612-bb5c-79441730ff07
-

மலேசியாவுடன் தற்போது நிலவும் கடல்துறை சர்ச்சை தொடர்வதற்கு சிங்கப்பூர் விரும்ப வில்லை. ஆனால், தனது அரசுரி மைக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதைக் கட்டிக் காக்க கடும் நடவடிக்கை எடுக்க வும் சிங்கப்பூர் தயங்காது என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்து உள்ளார். ஜூரோங் ஈஸ்ட்டில் நேற்று நடைபெற்ற சமூக சாலைக் காட்சி யில் உரையாற்றிய பிறகு அமைச்சர் ஃபூ இவ்வாறு கருத்துரைத்தார். "இந்த சூழ்நிலையிலிருந்து நாம் உடனடியாக விடுபட வேண் டும். இந்தப் பதற்றத்தை நீடிக்கவிட யாரும் விரும்பமாட்டார்கள்.

நமது அரசுரிமை பாதிக்கப்படும்போது நாம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றும் திருவாட்டி ஃபூ கூறினார். நேற்று முன்னேரத்தில், சிங்கப் பூரின் வெளியுறவு அமைச்சு, சிங்கப்பூருக்கான மலேசியாவின் தற்காலிகத் தூதருக்கு அரசதந்தி ரக் கடிதம் ஒன்றை வழங்கியது. அதில் சிங்கப்பூரின் துவாஸ் கடற் பகுதியிலிருந்து மலேசியக் கப்பல் கள் உடனே வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. சிங்கப்பூரின் கடற்பகுதியில் மலேசியக் கப்பல்கள் தென்படுவ தால் சிங்கப்பூரின் கடலோரக் காவற்படை அங்கு தொடர்ந்து சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள் ளதை அமைச்சர் சுட்டினார்.

ஜூரோங் ஈஸ்ட்டில் நேற்று நடைபெற்ற போலிஸ் சமூக சாலைக் காட்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ (இடக்கோடி). படம்: சிங்கப்பூர் போலிஸ் படை