மே மாதம், பொதுத் தேர்தல் காலகட்டத்தின்போது விதிமுறைகளுக்கு உட்படாத 227 அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட்டதாகத் தேர்தல் துறை தெரிவித்தது.
ஏப்ரல் 15ஆம் தேதிக்கும் மே 3ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட்டன.
தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளுக்குச் (11 கட்சிகள்) சொந்தமான சில விளம்பரங்கள் அகற்றப்பட்டன.
அவற்றில் ஆக அதிகமானது ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சியின் விளம்பரங்களாகும்.
அக்கட்சிக்குச் சொந்தமான 60 விளம்பரங்கள் அகற்றப்பட்டன.
அதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்குச் சொந்தமான 46 விளம்பரங்கள் அகற்றப்பட்டன.
மக்கள் செயல் கட்சியின் 37 விளம்பரங்களும் சிங்கப்பூர் மக்கள் கட்சியின் 33 விளம்பரங்களும் பாட்டாளிக் கட்சியின் 13 விளம்பரங்களும் அகற்றப்பட்டன.
மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஜெரமி டானின் ஆறு விளம்பரங்கள் அகற்றப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
ராடின் மாஸ் தனித்தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் டோரல் லோவின் விளம்பரங்கள் ஏதும் அகற்றப்படவில்லை.
இந்தத் தகவல்களைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சார்பாக பொதுச் சேவைக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.