2021 முதல் எக்சிகியூடிவ் கொண்டோமினியத்தின் விலை 24.1% உயர்வு

1 mins read
e28d86b9-e116-4ad8-9779-cc3a69b92bd6
கடந்த மார்ச் மாதம் தெம்பனிசில் உள்ள பார் செண்டரல் ரெசிடன்ஸ் கூட்டுரிமை வீடு ஒன்று 1.6 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டது.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குறைந்த அளவில் விற்பனைக்கு வருவதாலும் இளம் சிங்கப்பூர் குடும்பங்களின் விருப்பமான தெரிவாக இருப்பதாலும் எக்சிகியூடிவ் கொண்டோமினியத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.

2021ஆம் ஆண்டு முதல் எக்சிகியூடிவ் கொண்டோமினியத்தின் விலை 24.1 விழுக்காடு உயர்ந்துள்ளதாக சொத்து விற்பனை நிறுவனமான சிங்கப்பூர் ரியால்டர்ஸ் இன்க் (SRI) தெரிவித்துள்ளது.

SRI தனது கருத்தாய்வில் திரட்டப்பட்ட அந்த புள்ளிவிவரங்களை வியாழக்கிழமை வெளியிட்டது

இவ்வாண்டு புதிதாகக் கட்டப்பட்டு விற்பனைக்கு வரும் எக்சிகியூடிவ் கொண்டோமினியத்தின் சராசரி விலை ஒரு சதுர அடிக்கு 1,460 வெள்ளி என்று அது கூறியது.

ஆனால் 2021ஆம் ஆண்டு புதிதாகக் கட்டப்பட்டு விற்பனைக்கு வரும் எக்சிகியூடிவ் கொண்டோமினியத்தின் சராசரி விலை ஒரு சதுர அடிக்கு 1,176 வெள்ளி என்று இருந்தது.

இவ்வாண்டு விற்பனைக்கு வந்த எக்சிகியூடிவ் கொண்டோமினியங்களில் 50 விழுக்காட்டுக்கு மேலானாவை ஒரு சதுர அடி 1,500 வெள்ளிக்கு மேல் விற்கப்பட்டது.

அதே நேரம் 8.8 விழுக்காட்டு எக்சிகியூடிவ் கொண்டோமினியங்கள் ஒரு சதுர அடி 1,300 வெள்ளிக்கு கீழ் விற்கப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் தெம்பனிசில் உள்ள பார் செண்டரல் ரெசிடன்ஸ் கூட்டுரிமை வீடு ஒன்று 1.6 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டது. அதன் மொத்த சதுர அடி 925.7 ஆகும். அந்த விற்பனை ஆண்டின் ஆக விலை உயர்ந்த விற்பனை என்று புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்