தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுவா சூ காங்கில் கொள்ளை முயற்சி: 24 வயது ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
4e19ec61-6f0b-4ae6-b460-03d098f3d0cd
ஏப்ரல் 14ஆம் தேதி, சுவா சூ காங் பேரங்காடியில் நடந்த கொள்ளை முயற்சியில், 24 வயது ஆடவர் ஒருவர் காசாளரை நோக்கி இரும்புக் கம்பியைக் காட்டினார். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சுவா சூ காங்கில் உள்ள பேரங்காடி ஒன்றில், இரும்பு கம்பியைக் காட்டி காசாளரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற 24 வயது ஆடவர்மீது ஏப்ரல் 15ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஹேரி சியா யின் சியாங் என்ற அந்த ஆடவர் பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

அந்தச் சம்பவம் ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை 3.10 மணிவாக்கில் ‘யு-ஸ்டார்’ பேரங்காடியில் நடந்தது. அவர் கேட்ட தொகை குறித்து, நீதிமன்ற ஆவணங்களில் வெளியிடப்படவில்லை.

அந்தக் காசாளர் சியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவில்லை என்றும், அதன் பிறகு சியா பேரங்காடியை விட்டு வெளியேறினார் என்றும் காவல்துறை தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில், அதிகாலை 3.15 மணிக்குப் புகார் செய்யப்பட்டது.

சியா தற்போது மனநலக் கழகத்தில் மருத்துவப் பரிசோதனைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்