துவாஸ் சோதனைச்சாவடியில் போக்குவரத்துக் காவல்துறை நடத்திய அமலாக்க நடவடிக்கையில், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 25 மோட்டார்சைக்கிளோட்டிகள் மே 16ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
அச்சோதனைச்சாவடியில் சுமார் 400 மோட்டார்சைக்கிளோட்டிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 18 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகள் பிடிபட்டதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (மே 26) தெரிவித்தது.
செல்லுபடியாகும் உரிமமின்றி ஓட்டியது, காப்புறுதி இல்லாமல் மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்தியது போன்ற குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
செல்லுபடியாகும் உரிமமின்றி வேறொருவர் மோட்டார்சைக்கிளை ஓட்டவும் காப்புறுதி இல்லாமல் மற்றொருவர் வாகனத்தைப் பயன்படுத்தவும் அனுமதித்ததற்காக 21 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்படலாம்.

