கிராஞ்சி விரைவுச்சாலையில் நடந்த மூன்று லாரிகள் சம்பந்தப்பட்ட விபத்தில் 26 ஆடவர்கள் காயமடைந்தனர். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை காலையில் நடந்தது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது சுயநினைவுடன் தான் இருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து எங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை 7.10 மணிக்குத் தகவல் கிடைத்தது. இது புக்கிட் தீமா விரைவுசாலைக்குச் செல்லும் வழியில் சுவா சூ காங்கில் அமைந்துள்ள மேம்பாலத்திற்கு அருகே நடந்தது என காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையும் தெரிவித்தது.
மேலும், லாரியின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த இருவரை மீட்புக் கருவிகள் உதவியுடன் மீட்டோம் என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது.
அந்த லாரிகளில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்றன. அவர்களில் பலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது என சீனமொழி நாளிதழ் ஆன ஷின்மின் தெரிவித்தது.
காயமடைந்த ஊழியர்களில் ஒருவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது எனவும் மற்ற ஊழியர்களை துணை மருத்துவர்கள் காயங்களைப் பரிசோதித்தனர் எனவும் அந்த நாளிதழ் தெரிவித்தது.

