தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெம்பனிஸ், மத்திய வட்டாரங்களில் சோதனை; 27 மின்சிகரெட்டுகள் பறிமுதல்

1 mins read
63a9e783-ac60-45aa-bcb7-a3d1c7b76382
சீருடை அணியாமல் பொதுமக்கள்போல் இருந்த அதிகாரிகள் தெம்பனிஸ் வட்டாரத்தில் சோதனை நடத்தினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சுகாதார அறிவியல் ஆணையமும் தேசிய சுற்றுப்புற வாரியமும் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் 27 மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

24க்கும் 43க்கும் இடைப்பட்ட வயதுடைய நால்வர் மின்சிகரெட்டுகள் பயன்படுத்தியபோது அதிகாரிகளிடம் சிக்கினர்.

செப்டம்பர் 15 முதல் 18ஆம் தேதி வரை தெம்பனிஸ், மத்திய வட்டாரங்களில் சுகாதார அறிவியல் ஆணைய, தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

புதன்கிழமை (செப்டம்பர் 17) தெம்பனிசில் நடத்தப்பட்ட அமலாக்கச் சோதனையின்போது செய்தியாளர்களும் அதிகாரிகளுடன் இருந்தனர்.

சீருடை அணியாமல் பொதுமக்கள்போல் இருந்த அதிகாரிகள், தெம்பனிஸ் கடைத்தொகுதி, தெம்பனிஸ் ஒன், செஞ்சுரி ஸ்குவேர் கடைத்தொகுதி, தெம்பனிஸ் பேருந்துச் சந்திப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர்.

அப்போது மின்சிகரெட் பயன்படுத்திய இரண்டு நபர்கள் அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்களின் வயது 35, 43.

புதன்கிழமை மட்டும் 18 மின்சிகரெட்டுகள் பிடிபட்டன.

இதற்கிடையே, சோதனையின்போது 21 வயதுக்குக்கீழ் உள்ள ஒன்பது இளையர்கள் சிகரெட் புகைத்தபோது அதிகாரிகளிடம் சிக்கினர்.

21 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் புகைபிடித்தால் அவர்களுக்கு $300 வரை அபராதம் விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்