ஆர்ச்சர்ட் சாலையில் இருக்கும் லக்கி பிளாசா கடைத்தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எழுவருக்கு இடையே சண்டை மூண்டது. அதைத் தொடர்ந்து 31லிருந்து 52 வயதுக்கு உட்பட்ட மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஐந்து ஆடவர்களும் இரண்டு பெண்களும் ஈடுபட்ட சண்டை ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் மூண்டதாகக் காவல்துறை தெரிவித்தது. ஆடவர்கள் 31லிருந்து 63 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் பெண்கள் 41லிருந்து 44 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
52லிருந்து 55 வயதுக்கு உட்பட்ட இரண்டு பெண்களும் இரு ஆடவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றவர்கள் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகின்றனர்.
சண்டையைக் காட்டும் காணொளியில் 'அமைதி!', 'இல்லை!', 'நிறுத்து!' என்று கூறுவதைக் கேட்க முடிந்தது.


