மத்திய விரைவுச் சாலையில் (CTE) ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 9) காலை மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சந்தேகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காலை 7:15 மணிவாக்கில் சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கி செல்லும் மத்திய விரைவுச் சாலையில் மூன்று கார்களும் ஒரு லாரியும் விபத்துக்குள்ளானதாகக் காவல்துறைக்கு தகவல் வந்ததாக அதிகாரிகள் கூறினர்.
27 மற்றும் 47 வயதுள்ள இரு ஆடவர்களும் 29 வயது மாதும் மதுபோதையில் வாகனத்தை ஓட்டியதன் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர்.
33 வயது லாரி ஓட்டுநர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் குடிமைத் தற்காப்புப்படை தெரிவித்தது.
விபத்தால் விரைவுச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டது.
காவல்துறை விசாரணையைத் தொடர்கிறது.