ஜாலான் காயுவில் நிகழ்ந்த விபத்தில் மூவர் காயமடைந்தனர்.
இரண்டு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட அந்த விபத்து கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) பிற்பகலில் நிகழ்ந்தது.
அதன் விவரங்கள் தற்போது வெளிவந்து உள்ளன.
ஜாலான் காயு-செங்காங் வெஸ்ட் சந்திப்பு அருகே விபத்து நிகழ்ந்ததாக அன்று பிற்பகல் 1.50 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிய 50 வயது ஆடவர், அதன் பின்னால் அமர்ந்திருந்த 40 வயதுப் பெண், காரில் இருந்த 34 வயது பெண் ஆகிய மூவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அப்போது அந்த மூவரும் சுயநினைவுடன் இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
இருவர் கூ டெக் புவாட் மருத்துவமனையிலும் ஒருவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அவசர வாகனம் வரும் வரை சம்பவ இடத்தில் காயமடைந்தோரைப் பத்திரமாகப் பாதுகாப்பதில் ஏராளமானோர் ஈடுபட்டு இருந்ததை, வியாழக்கிழமை (ஜனவரி 30) பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்று காட்டியது.
அந்தக் காணொளி Singapore Roads Accident.com என்னும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சாலையில் உலோகப் பாகங்கள் நொறுங்கிக் கிடப்பதையும் வாகனம் ஒன்று சாலைத் தடுப்பில் மோதி நிற்பதையும் அதில் காணமுடிந்தது.
அந்த விபத்து தொடர்பான விசாரணையில் 48 வயது கார் ஓட்டுநர் உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

