ஆர்ச்சர்ட் சாலையில் வேகமாகச் சென்ற மூன்று கார்களைத் துரத்திய அதிகாரிகள்

ஆர்ச்சர்ட் சாலையில் வேகமாகச் சென்ற மூன்று கார்களைத் துரத்திய அதிகாரிகள்

1 mins read
dab78e8f-3ee9-4dd3-b763-79f5f943bbe7
-

கிறிஸ்துமஸ் நாளன்று பின்னிரவு 1.49 மணியளவில் ஆர்ச்சர்ட் சாலையில் குறைந்தது மூன்று கார்கள் வேகமாகச் செல்லும் காட்சி வேறொரு காரின் கண்காணிப்புக் கருவியில் பதிவானது.

ஆர்ச்சர்ட் சென்ட்ரல் கடைத்தொகுதிக்கு வெளியே போக்குவரத்து விளக்கு பச்சை நிறத்திற்கு மாறியவுடன், அந்த மூன்று கார்களும் வேகமெடுக்கத் தொடங்கின.

இந்தக் காணொளியைப் பதிவுசெய்த காரைக் கடந்து சென்ற அந்த மூன்று கார்கள், 10 வினாடிகளுக்குள் மாயமாகிவிட்டன.

சுமார் 4 வினாடிகள் கழித்து, நிலப் போக்குவரத்து ஆணைய அமலாக்க அதிகாரி மோட்டார்சைக்கிளில் அந்த மூன்று கார்களைத் துரத்தினார்.

பின்னர், மோட்டார்சைக்கிள்களில் வேறு இரு அதிகாரிகள் முதலாமவரை பின்தொடர்ந்தனர்.

அந்த மூன்று கார்களும் ஓரங்கட்டப்பட்டனவா என்பது பற்றி தெரிய வருவதற்குள் காணொளி முடிவுக்கு வந்தது.