தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுமியை மானபங்கம் செய்த இந்திய சுற்றுப்பயணிக்கு 3 மாதச் சிறை

2 mins read
35010d76-be30-4585-be8d-ba45f2b085a4
ஐந்து நிமிட இடைவெளியில் அச்சிறுமியை இருமுறை கைப்பேசியில் அழைத்ததுடன் 13 இன்ஸ்டகிராம் தகவலையும் பிரமேந்தர் அனுப்பினார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நீச்சல்குளம் அருகே 12 வயது சிறுமியை மானபங்கம் செய்த ஆடவருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இருந்து சுற்றுப்பயணியாக சிங்கப்பூர் வந்திருந்த பிரமேந்தர் என்னும் 25 வயது ஆடவர், கடந்த மார்ச் 31ஆம் தேதி சிறுமியை மானபங்கம் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அன்றைய தினம் ஜாலான் புசார் நீச்சல்குளத்தில் தமது அத்தை, மாமா மற்றும் ஐந்து உறவினர்களுடன் அந்தச் சிறுமி இருந்தார். மாலை 5.50 மணியளவில் நீச்சல்குள வளாகத்தைவிட்டு வெளியேறியபோது பிரமேந்தர் தம்மைப் பார்த்து முறைப்பதை அவர் கண்டார்.

நீச்சல் உடையை மாற்றம் கழிவறைக்குச் சென்றபோது அந்தச் சிறுமியை ஆடவர் பின்தொடர்ந்தார்.

கழிவறை நுழைவாயிலில் அந்தச் சிறுமியைப் பிடித்தார். தம்மை இன்ஸ்டகிராமில் பின்தொடருமாறு சிறுமியிடம் வற்புறுத்தினார் அவர்.

தொடர்ந்து சிறுமியின் கைப்பேசியை எடுத்து சிறுமியின் இன்ஸ்டகிராம் கணக்கைத் திறந்து தமது கணக்கைப் பின்தொடருமாறு அவராகவே செய்துவிட்டார். அப்போது சிறுமியை பக்கவாட்டில் அணைத்தார்.

அந்த நேரம் சிறுமி அணிந்திருந்த துண்டு ஒருபக்கமாகச் சரிந்தது. துண்டு மறைக்காத பகுதியை ஆடவரின் கை தொட்டது. அதனால் சிறுமி அச்சமும் அதிர்ச்சியும் அடைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பெண்கள் கழிவறையில் சிறுமியும் அவரது உறவுப் பெண்ணும் நுழைந்தபோது கழிவறைக்கு வெளியே ஆடவர் திரிந்தார். உறவுப் பெண் எச்சரித்ததைத் தொடர்ந்து அங்கிருந்து நகர்ந்து வேறு இடத்தில் காத்திருந்தார். ஐந்து நிமிட இடைவெளியில் அச்சிறுமியை இருமுறை கைப்பேசியில் அழைத்ததுடன் 13 இன்ஸ்டகிராம் தகவலையும் பிரமேந்தர் அனுப்பினார்.

அதனால் அச்சம் அதிகரித்து, அங்கிருந்த பாதுகாவலரிடம் சிறுமியும் உறவுப்பெண்ணும் புகார் செய்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஏப்ரல் 2ஆம் தேதி பிரமேந்தர் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்