பிடோக் சென்ட்ரலில் புதிதாக 3 காசநோய் பரவும் இடங்கள் கண்டுபிடிப்பு

பிடோக் சென்ட்ரலில் புதிதாக 3 காசநோய் பரவும் இடங்கள் கண்டுபிடிப்பு

1 mins read
அங்கு அடிக்கடி சென்றோருக்குப் பரிசோதனைகள் நடத்தப்படும்
065c7af4-bc3d-4000-a393-a0ee28f46116
புளோக் 216 பிடோக் உணவு நிலையம் & சந்தை உள்ளிட்ட, காசநோய்ப் பரவல் புதிதாக அடையாளம் காணப்பட்ட மூன்று இடங்களுக்கு அடிக்கடி சென்ற சிலருக்கு அது தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் காசநோய்ப் பரவல் அதிகமுள்ள பகுதிகளாக பிடோக் சென்ட்ரலில் புதிதாக மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஹார்ட்பீட்@பிடோக், புளோக் 261ல் உள்ள உணவு நிலையம் & சந்தை, புளோக் 215 பிடோக் நார்த் ஸ்திரீட் 1ல் அமைந்துள்ள சிங்கப்பூர் பூல்ஸ் பிடோக் நிலையம் ஆகியவை அந்த மூன்று இடங்கள்.

காசநோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் 13 பேர் இந்த இடங்களுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் அந்த இடங்களுக்கு அடிக்கடி சென்றவர்கள் அல்லது அங்கு அதிக நேரம் செலவிட்டவர்கள் என்று தெரிகிறது.

இதைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள், அந்தப் பகுதியில் வேலைசெய்வோர் என ஏறத்தாழ 700 பேருக்குக் கட்டாய காசநோய்ப் பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது. ஹார்ட்பீட்@பிடோக்கில் மே 4 முதல் 7ஆம் தேதி வரை இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தொற்றுநோயைக் கண்டறிதல், கட்டுப்படுத்தல், தவிர்த்தலுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்