தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொது இடத்தில் சண்டை: அமைதியைக் குலைத்ததாக சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

1 mins read
111649f6-7304-42d7-9df0-83a404601d94
பொது இடத்தில் சண்டை போட்டு அமைதியைக் குலைத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம். - படம்: இணையம்

பொது இடத்தில் சண்டை போட்டு அமைதியைக் குலைத்ததாக சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மீது செப்டம்பர் 27ஆம் தேதியன்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து தனக்குத் தெரியும் என்று சிங்கப்பூர் ஆயுதப் படை கூறியது.

ஜூன் மாதம் 29ஆம் தேதி இரவு 8 மணி அளவில் பூன் லே வேயில் உள்ள தி செவ்ரோன்ஸ் பொழுதுபோக்கு மன்றத்தில் இருக்கும் ஏவியரி கேடிவி விடுதியில் 41 வயது இ சி வெய், 34 வயது கெவின் நிக்கலஸ் சைமன், 43 வயது கெல்வின் டாங் சீ டாட் ஆகிய மூவரும் சண்டை போட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணை முடிந்ததும் இந்த மூவருக்கு எதிராகக் கூடுதல் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக சிங்கப்பூர் ஆயுதப் படை தெரிவித்தது.

தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க அது மறுத்துவிட்டது.

இந்த வழக்குடன் தொடர்புடைய மூன்று அதிகாரிகளும் நவம்பர் மாதம் 8ஆம் தேதியன்று குற்றத்தை ஒப்புக்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொது இடத்தில் சண்டை போட்டு அமைதியைக் குலைத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்