டோட்டோ ஹொங் பாவ் $12.6 மில்லியன் ஜாக்பாட் மூன்று பரிசுச் சீட்டுகளுக்குக் கிடைத்துள்ளது. மொத்த பரிசுத் தொகை ஆளுக்கு $4.2 மில்லியன் என அந்த மூன்று சீட்டுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
அதிர்ஷ்டக் குலுக்கில் பரிசு பெற்ற எண்கள்: 16, 18, 22, 23, 28, 35, உபரி எண்: 32.
பரிசு வென்ற சீட்டுகள் மூன்று வெவ்வேறு இடங்களில் வாங்கப்பட்டன.
அவற்றில் ஒன்று 3 மெக்கல்லம் ஸ்திரீட்டில் உள்ள 7-லெவன் கடையிலும் மற்றொன்று லோரோங் 4 தோ பாயோவில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கடையிலும் மூன்றாவது சீட்டு சிங்கப்பூர் பூல்ஸ் பந்தயச் சேவை நிலையத்திலும் வாங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்ததாக, குரூப் 2 பிரிவுக்கான பரிசுத்தொகை 36 சீட்டுகளுக்குக் கிடைத்துள்ளது. அதற்கான $73,857 பரிசுத்தொகை அந்தச் சீட்டுகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும்.
ஹொங் பாவ் ஜாக்பாட் பரிசுத்தொகை ($12.6 மி.) அதிகம் என்பதால் குலுக்கல் முடிவைத் தெரிந்துகொள்ள வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) மாலை, தீவு முழுவதும் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கடைகளில் பெருங்கூட்டம் காணப்பட்டது.
குறிப்பாக, சிராங்கூனில் உள்ள நெக்ஸ் கடைத்தொகுதியில் உள்ள ஃபேர்பிரைஸின் சிங்கப்பூர் பூல்ஸ் கடைக்கு வெளியே நீண்டதூரத்துக்கு வரிசைகள் நீண்டிருந்தன.
கடைத்தொகுதியின் வளாகத்தையும் கடந்து கார்நிறுத்தும் இடத்திற்குச் செல்லும் வழிநெடுகிலும் ஏராளமானோர் காத்திருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் ‘டோட்டோ ஹொங் பாவ் அதிர்ஷ்டக் குலுக்கு’ கடந்த 2000ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் பூல்ஸ் குழுமத்தால் நடத்தப்பட்டு வருகிறது.