அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் இறந்து கிடந்த 3 வயது சிறுவன்

அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் இறந்து கிடந்த 3 வயது சிறுவன்

1 mins read
57e97513-78d6-4e80-911e-69cb73655fd7
அங் மோ கியோ அவென்யூ 1ல் இருக்கும் புளோக் 332ன்  கீழ்த்தளத்தில் மூன்று வயது சிறுவன் அசைவின்றி கிடந்தார். அவர் உயிரிழந்ததாக பின்னர் துணை மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர். படம்: ஸ்டோம்ப் -

அங் மோ கியோ அவென்யூ 1ல் இருக்கும் புளோக் 332ன் கீழ்த்தளத்தில் மூன்று வயது சிறுவன் அசைவின்றி கிடந்தார். அவர் உயிரிழந்ததாக பின்னர் துணை மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

போலிசார் அந்தப் பகுதியில் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.

இன்று (பிப்ரவரி 18) அதிகாலை 4 முதல் 5 மணிக்குள்ளாக இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று அக்கம்பக்கக் கடைக்காரர்கள் தெரிவித்ததாக ஸ்டோம்ப் வாசகர் குறிப்பிட்டார்.

காலை 9 மணியளவில்கூட நீல நிறக் கூடாரத்தை புளோக்கின் கீழ்த்தளத்தில் பார்க்க முடிந்தது.

இயற்கைக்கு மாறான இந்த மரணம் குறித்து காலை 6.38 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். போலிஸ் விசாரணை தொடர்கிறது.

#தமிழ்முரசு #சிறுவன் மரணம் #அங் மோ கியோ

குறிப்புச் சொற்கள்