மூத்த பொது மருத்துவருக்கு மூன்று ஆண்டு மருத்துவராக பணியாற்ற தடை

மூத்த பொது மருத்துவருக்கு மூன்று ஆண்டு மருத்துவராக பணியாற்ற தடை

1 mins read
fd50a105-5bf9-43ea-a089-c1068bdf9da3
படம்: - தமிழ்முரசு

மரீன் பரேடில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மருந்தகம் நடத்தி வந்த 35 ஆண்டு அனுபவம் உடைய 61 வயதான பொது மருத்துவர் மனிந்தர் சிங் ஷாஹிக்கு மருத்துவராக பணியாற்ற மூன்று ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

அவரிடம் பல காலமாக சிகிச்சைபெற்ற ஏழு நோயாளிகளுக்குத் தவறான முறையில் நீண்டகாலமாக மயக்க மருந்துகளைப் பரிந்துரைத்த காரணத்தால் அவருக்கு இத்தடையை ஒழுங்குமுறைத் தீர்ப்பாயம் செவ்வாய்க்கிழமை விதித்தது.

அந்நோயாளிகளில் பெரும்பாலானோரை மனநல மருத்துவரிடமோ மனநல நிபுணரிடமோ சிகிச்சைப் பெற பரிந்துரைக்காமல் தானே அவர்களுக்குத் தூக்கமின்மை போன்ற நோய்க்குச் சிகிச்சையளிக்கத் தரப்படும் மாத்திரைகளைப் பரிந்துரை செய்ததாக சொல்லப்பட்டது.

மேலும், இதுபோன்ற மாத்திரைகளை நோயாளி ஒருவருக்குப் பரிந்துரைத்ததற்கான காரணங்களை அவர் ஆவணப்படுத்தத் தவறிவிட்டதாக கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்