இரண்டாம் நிலை புகை: 2025ல் 30% புகார்கள் ஏற்கெனவே புகார் அளித்தவர்களிடமிருந்து வந்தன

இரண்டாம் நிலை புகை: 2025ல் 30% புகார்கள் ஏற்கெனவே புகார் அளித்தவர்களிடமிருந்து வந்தன

1 mins read
6177cde1-57e0-48b2-a70a-c33e987b7cd1
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் நிலை புகைக்கு எதிராக மீண்டும் வலுவான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2025ஆம் ஆண்டில் அண்டை வீடுகளிலிருந்து வரும் இரண்டாம் நிலை புகையிலை புகை (second-hand smoke) தொடர்பாகக் கிட்டத்தட்ட 600 புகார்கள் தேசிய சுற்றுப்புற வாரியத்திற்கு வந்தன.

அதில், கிட்டத்தட்ட 30 விழுக்காடுப் புகார்கள் ஏற்கெனவே அப்பிரச்சினை குறித்து புகார் தெரிவித்தவர்களிடமிருந்து வந்தவை.

இதுபோன்ற புகார்கள் வரும்போது, புகைப்பிடிப்போர் தங்கள் அண்டை வீட்டாருக்கு இடையூறு விளைவிக்காமல் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்க, அரசு நிறுவனங்களுடன் அல்லது சம்பந்தப்பட்ட நகர மன்றங்களுடன் இணைந்து தேசிய சுற்றுப்புற வாரியம் செயல்படுவதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.

மேலும், புகார்கள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டதா என்பதை வாரியம் தொடர்ந்து கண்காணிப்பதில்லை என்றாலும், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பிறகு பெரும்பாலான புகார்கள் மீண்டும் வரவில்லை என நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (மே 6) அவர் கூறினார்.

“பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது நகர மன்றம் குடியிருப்பாளர்களை நேரில் சந்தித்துப் பேசக்கூடும். பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் சமூக சமரச நிலையத்தை அணுகுவது போன்ற சமரச முயற்சிகள் மூலம் அப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்,” என்றார் திரு ஜனில்.

வீடுகளின் சன்னல்கள், மாடி முகப்புகளில் (பால்கனி) இருந்து வரும் புகையை பொதுத் தொல்லையாக வகைப்படுத்துவது உட்பட, இரண்டாம் நிலை புகைக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.

அதற்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்