தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பார்ட்லி சாலையில் விபத்து:; 30 வயதுப் பெண் ஓட்டுநர் கைது

1 mins read
ebf5fb42-ae56-43b4-8255-775caf5f94c9
விபத்துக்குள்ளான காரை ஓட்டிய பெண்ணை அதிகாரிகள் கைதுசெய்தனர். - படம்: எஸ்ஜிஆர்வி ஃபிரண்ட் மேன்

பார்ட்லி சாலை ஈஸ்ட்டில் மோட்டார்சைக்கிளும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் 70 வயது ஆடவர் சுயநினைவின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பார்ட்லி சாலை ஈஸ்ட்டுக்கும் ஏர்போர்ட் சாலைக்கும் இடைப்பட்ட சந்திப்பில் சனிக்கிழமை (மார்ச் 15) மாலை 4.40 மணியளவில் நேர்ந்த விபத்து குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.

விபத்துக்குள்ளான காரை 30 வயதுப் பெண் ஓட்டியதாக நம்பப்படுகிறது.

கவனக்குறைவாகக் காரை ஓட்டியதற்காகவும் அடுத்தவருக்குக் காயம் ஏற்படுத்தியதற்காகவும் அதிகாரிகள் அப்பெண்ணைக் கைதுசெய்தனர்.

விபத்தில் காயமுற்ற மோட்டார்சைக்கிளோட்டியைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சாங்கிப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்