தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$14 மில்லியன் மோசடி; 309 பேரிடம் விசாரணை

2 mins read
461f2b4e-a1af-4601-8f04-4211912bda8d
ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை தீவு முழுவதும் அதிகாரிகள் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 309 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேக நபர்கள் மூலம் 14 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 211 நபர் ஆண்கள் என்றும் 98 பேர் பெண்கள் என்றும் காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 21) தெரிவித்தது. அவர்களின் வயது 15க்கும் 75க்கும் இடைப்பட்டது.

சந்தேக நபர்கள் 1,700க்கும் அதிகமான மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களிடம் மோசடி, சட்டவிரோதமான முறையில் பணப்பரிவர்த்தனை, உரிமம் இல்லாமல் பணக் கட்டணச் சேவை வழங்குவது போன்ற குற்றங்களின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.

நண்பர்கள் போல் போலி கணக்கில் இருந்து அழைப்பது, இணைய வர்த்தக முதலீடு, காதல் மோசடி, வேலை மோசடி ஆகியவற்றின் மூலம் பண இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை தீவு முழுவதும் அதிகாரிகள் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் மீது மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.

மோசடிகளில் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டது.

அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கைவிடுத்தாலும் மோசடி சம்பவங்களில் சிக்குபவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. 2023ஆம் ஆண்டு மட்டும் 46,563 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அதன் மூலம் 651.8 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்