வங்கியில் வர்த்தக அதிகாரியாக வேலை செய்து வந்த ஆடவர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக 31 இளம்பெண்களுடன் பாலியல் தொடர்பான உறவில் ஈடுபட்டுள்ளார்.
ஹீ லிக் யுவான் என்ற அந்த 32 வயது ஆடவர் 2019ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுவரை குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
யுவான் பாலியல் துன்புறுத்தல் செய்த பெண்களின் வயது 13க்கும் 22க்கும் இடைபட்டது.
யுவானின் குற்றச்செயல்களுக்காக அவருக்குப் புதன்கிழமை (ஏப்ரல் 16) ஆறு ஆண்டுகள் 9 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
அவர் பணம் கொடுத்து இளம்பெண்களிடமிருந்து அவர்களின் ஆபாசப் படங்களையும் காணொளிகளையும் பெற்றுள்ளார்.
பெண்களின் வயது தெரிந்தே அவர்களுடன் யுவான் பாலியல் உறவுகொண்டார்.
இந்நிலையில், இளம்பெண் ஒருவருக்கு அவர் தொடர்ச்சியாகப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் யுவான்மீது வேறு சில இளம்பெண்கள் காவல்துறையில் புகார் கொடுத்தனர். அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
விசாரணையில் அவர் 31 பெண்களிடம் தவறாக நடந்துகொண்டது தெரியவந்தது.