தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் 31 வயது சிங்கப்பூரருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

1 mins read
13f53495-b8ad-4ed9-b3a9-0ae8ab9580bb
ஆடவரும் அவரது காதலியும் போதைப்பொருள்களை ஜோகூரில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பலவிதமான போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் 31 வயது சிங்கப்பூர் ஆடவருக்கு ஆயுள் தண்டனையோ மரண தண்டனையோ விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பிரேடன் ஒங் என்னும் அந்த ஆடவருக்கு வேங் வீ சிங் என்னும் மலேசிய பெண் துணையாக இருந்துள்ளார். அந்தப் பெண் ஓங்கின் காதலி என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேங் வீ மீதும் அதே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 29ஆம் தேதி ஜோகூர் பாருவில் உள்ள முதன்மை நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 2,667 கிராம் ‘மெத்தம்பேட்டமைன்’, 457 கிராம் ‘எம்டிஎம்ஏ’ துகள் போன்ற போதைப்பொருள்களை ஜோகூரில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர்.

அவர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனையோ மரண தண்டனையோ விதிக்கப்படலாம்.

இதனிடையே கைது செய்யப்பட்ட இருவரிடமும் 2,240 மில்லி லிட்டர் எம்டிஎம்ஏ போதைப்பொருள் நீர் வடிவில் இருந்தது. மேலும் மற்றொரு போதைப்பொருள் 1.85 கிராம் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆடவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து தங்களுக்கு தெரியும் என்று சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

மலேசிய அதிகாரிகளுக்கு விசாரணை தொடர்பாக அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அது கூறியது.

குறிப்புச் சொற்கள்