தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$32 மி. ஆடம்பரப் பொருள்கள் மோசடி: தாய்லாந்துப் பெண்ணுக்குச் சிறை

1 mins read
2031e3cf-2c05-405e-8ff6-ef4fcb4eb23d
ஆடம்பரப் பொருள்கள் மோசடியுடன் தொடர்புடைய பான்சுக் சிரிவிப்பாவுக்கும் (வலது) 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கணவரும் சிங்கப்பூரருமான பி ஜியாபெங்கின் (இடது) வழக்கு நிலுவையில் உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆடம்பரப் பொருள்கள் மோசடி வழக்கில் தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணுக்கு அக்டோபர் 29ஆம் தேதியன்று 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

30 வயது பான்சுக் சிரிவிப்பா மோசடியின் மூளையாகச் செயல்பட்டு கிட்டத்தட்ட 200 பேரை ஏமாற்றினார்.

தம்மீது சுமத்தப்பட்ட 30 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

அவர்மீது மொத்தம் 180 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

தீர்ப்பளிக்கும்போது எஞ்சிய குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

விலை உயர்ந்த பைகள், கைக்கடிகாரங்கள் ஆகிய ஆடம்பரப் பொருள்களைத் தன்னால் விற்க இயலாது என்று தெரிந்தும் பலரிடமிருந்து அவர் அவற்றுக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு $25 மில்லியனுக்கும் அதிகமான தொகையை பான்சுக் ஏமாற்றிப் பறித்தார்.

இந்த $32 மில்லியன் பெறுமானமுள்ள ஆடம்பரப் பொருள்கள் மோசடி வழக்கில் பான்சுக்கின் கணவரும் சிங்கப்பூரருமான 29 வயது பி ஜியாபெங் ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

அவர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்