‘கேபோட்’ பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 32 பேர் பிடிபட்டனர்

1 mins read
புதிய சட்டங்கள் செப்டம்பர் 1ல் நடப்புக்கு வந்தன
2faafbc9-40be-45e2-8e43-6d67be4a8ddc
‘கேபோட்’ பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர், காவல்துறை அதிகாரியால் கைதுசெய்யப்படுகிறார். - படம்: சுகாதார அறிவியல் ஆணையம்
multi-img1 of 2

மின்சிகரெட்டுகளுக்கு எதிராக புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்த முதல் வாரத்தில், சிங்கப்பூர் முழுவதும் ‘எட்டோமிடேட்’ போதைப்பொருள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 32 பேர் பிடிபட்டனர்.

செப்டம்பர் 1க்கும் 7ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 232 பேர் அதிகாரிகளிடம் பிடிபட்டதாக சுகாதார அமைச்சு திங்கட்கிழமை (செப்டம்பர் 8) இரவு தெரிவித்தது.

மின்சிகரெட்டுகளுடன் பிடிபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ‘எட்டோமிடேட்’ இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் கருவிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தற்போது நடந்துவரும் ஆய்வகப் பரிசோதனையில், 14 பேரிடம் ‘கேபோட்’ இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 பேரின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

குற்றம் புரிந்த மூவருக்கு, ஆறு மாதங்கள் வரை மறுவாழ்வு சிகிச்சைக்குச் செல்லுமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.

இதற்கிடையே, சுகாதார அறிவியல் ஆணையம், ‘கேபோட்’ கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரை நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளது. போதைப்பொருளின் தவறான பயன்பாட்டுச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் நபர் அவர்.

‘எட்டோமிடேட்’ கலந்த 43 மின்சிகரெட்டுகளை வைத்திருந்தபோது பிடிபட்டதாகக் கூறப்படும் 40 வயது டெரிக் கோர் பூன் சுன்மீது திங்கட்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அங் மோ கியோ அவென்யூ 4ல் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 6) கோர் பிடிபட்டார்.

குறிப்புச் சொற்கள்