சிலேத்தார் வட்டாரத்தில் ஜூலை 6ஆம் தேதி ஏற்பட்ட வாகன விபத்தில் 35 வயது ஆடவர் மாண்டார். ஆடவர் ஓட்டிய வேன் கனரக வாகனத்துடன் மோதியது.
ஈசூன் அவென்யூ 1ஐ நோக்கிச் செல்லும் சிலேத்தார் வெஸ்ட் லிங் அருகே வேனும் கனரக வாகனமும் மோதிகொண்டது பற்றி காலை 10.05 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
சம்பவ இடத்திலேயே ஆடவர் மாண்டதைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.
சம்பவ இடத்தில் காவல்துறையின் நீல நிற கூடாரம் போடப்பட்டிருந்த படங்கள் இணையத்தில் பரவிவருகின்றன. குறைந்தது இரண்டு சாலைத் தடங்கள் மூடப்பட்டன.
அதிகாரிகள் விசாரணை தொடர்கிறது.
கடந்த ஆண்டு தரவுகளின்படி, 139 மரணம் விளைவிக்கும் விபத்துகள் நேர்ந்தன.

