சிங்கப்பூரில் கார்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.
வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தெம்பனிசில் மற்றொரு கார் தீப்பிடித்து எரிந்தது.
இது, ஐந்து நாளில் நிகழ்ந்துள்ள 3வது சம்பவமாகும்.
தெம்பனிஸ் ஸ்திரீட் 31ல் காலை 7.20 மணிக்கு கார் தீப்பிடித்தது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அங்கு விரைந்த தீயணைப்பாளர்கள், தீப்பற்றியிருந்த காரை, நீரைப் பிய்ச்சியடித்தும் நுரையை பாய்ச்சியும் அணைத்தனர்.
இதில் யாரும் காயம் அடையவில்லை என்று குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.
எஸ்ஜிஆர்வி எனும் ஃபேஸ்புக் குழுவில் பதிவேற்றப்பட்ட காணொளி, சாலையின் வலதுகோடி தளத்தில் ஒரு கார் தீப்பிடித்து எரிவதைக் காட்டியது. மூன்று தீயணைப்பாளர்கள் தீயை அணைக்கப் போராடினர்.
தீச்சம்பவத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இது, ஆக அண்மையில் நிகழ்ந்துள்ள கார் தீப்பற்றிய சம்பவமாகும்.
கடந்த மார்ச் 2ஆம் தேதி தீப்பற்றிய காரில் சிக்கிக் கொண்ட ஒருவர் உயிரிழந்தார். பல கார்களில் பொருத்தப்பட்ட கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில் நிக்கல் ஹைவேயில் அதிவேகமாக பாய்ந்து செல்லும் கார், சாலைத் தடுப்பு மீது மோதி மற்ற வாகனங்களை பக்கவாட்டில் உராய்ந்து பின்னர் கவிழ்ந்து தீப்பற்றி எரிவதைக் காண முடிகிறது.
சென்ற மார்ச் 5ஆம் தேதி நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில் ஜூரோங் வெஸ்ட்டில் தீப்பிடித்து எரிந்த காரிலிருந்து ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.
மேலும், பிப்ரவரி 27ஆம் தேதி பாய லேபாருக்கு அருகே தீவு விரைவுச் சாலையில் ஆறு கார்கள் மோதியதில் இரண்டு வாகனங்கள் தீப்பற்றின. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கடந்த 2024ஆம் ஆண்டில் வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்ததாக பிப்ரவரி 13ஆம் தேதி குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2024ல் 220 இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது, 2023ஆம் ஆண்டில் நடந்த 215 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகம்.
இதற்கிடையே தங்களுடைய வாகனங்களில் தீயணைக்கும் சாதனங்களை எடுத்துச் செல்லுமாறு பிப்ரவரி 18ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவில் குடிமைத் தற்காப்புப் படை கேட்டுக் கொண்டது.