தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$4.6 மில்லியன் மோசடி; ஆடவருக்கு 10 ஆண்டுகள் சிறை

1 mins read
db3addf8-e286-4196-abc5-7eabe130e901
கென்னத் 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை மோசடி வேலையில் ஈடுபட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அந்நிய செலாவணி (forex) வர்த்தகத்தில் தாம் சிறப்பாக செய்து வருவதாகக் கூறி 13 பேரிடம் பெரிய அளவில் நிதியை வாங்கி ஆடவர் ஒருவர் மோசடி செய்துள்ளார்.

கென்னத் காம் பூன் ஹீ என்னும் அந்த 57 வயது ஆடவர் தனது மோசடி வலையில் மக்களை விழவைக்க புத்தகங்கள், சஞ்சிகைகளை அச்சடித்தும் உள்ளார்.

கென்னத்தின் போலி வாக்குறுதிகளை நம்பி 4.6 மில்லியன் வெள்ளிக்கு மேலான தொகையை 13 பேர் கொடுத்தனர்.

கொடுக்கப்படும் நிதியை அந்நிய செலவாணி வர்த்தகத்தில் முதலீடு செய்து மாதம் 3 விழுக்காடு வட்டி தருவதாகக் கூறிய கென்னத் மோசடி செய்துள்ளார்.

கென்னத் 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை மோசடி வேலையில் ஈடுபட்டார். அவர் ஏமாற்றிய 13 பேரிடம் இருந்து $160,000 முதல் $800,000 வெள்ளி வரை நிதி வாங்கியுள்ளார்.

கென்னத் மீது 60க்கும் மேற்பட்ட மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கென்னத் திட்டமிட்டு மோசடி செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தனர்.

இந்நிலையில், கென்னத் மீது மேலும் 200க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அது தொடர்பான வழக்கு மற்றொரு நாள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

கென்னத் கிட்டத்தட்ட 94 மில்லியன் வெள்ளி வரை மற்றவர்களிடம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்