தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் உணவு விநியோக வேலை செய்ததற்காக 4 வெளிநாட்டினர் கைது

2 mins read
8674dca1-abb1-4c7b-87c9-fda9bb4d8411
முன்னதாக, 375 உணவு விநியோக ஊழியர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களிலிருந்து மூவர் கைது செய்யப்பட்டனர். - படங்கள்: மதர்ஷிப்

சிங்கப்பூரில் கடந்த சில மாதங்களாக 644 உணவு விநியோக ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாக உணவு விநியோகம் செய்த நான்கு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மனிதவள அமைச்சு அமலாக்க நடவடிக்கைகளை அதிகரித்த பிறகு இது நிகழ்ந்துள்ளது.

சுகாதார, மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியிட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவில், மனிதவள அமைச்சு அண்மையில் மேலும் 269 உணவு விநியோக ஊழியர்களிடம் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாகவும், செல்லுபடியாகும் வேலை அனுமதி அட்டை இல்லாமல் பணிபுரிந்ததற்காக வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, 375 உணவு விநியோக ஊழியர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களிலிருந்து மூவர் கைது செய்யப்பட்டனர்.

மனிதவள அமைச்சின் செயல்பாடுகள் சிங்கப்பூர் முழுவதும் 30க்கும் இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை தேசிய உணவு விநியோக ஊழியர்கள் சங்கத்தின் பங்காளிகளால் அடையாளம் காட்டப்பட்டன.

பாரம்பரிய தளவாட நிறுவனங்களின் விநியோக ஊழியர்கள் மற்றும் உணவகங்கள், பிற சில்லறை வணிகங்களின் விநியோக ஊழியர்களையும், மனிதவள அமைச்சு தனது சோதனை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சோதித்ததாகவும் டாக்டர் கோ தெரிவித்தார்.

அத்தகைய நிறுவனங்கள் செல்லுபடியாகும் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டினரை தங்கள் விநியோக ஊழியர்களாகப் பணியமர்த்த அனுமதிக்கப்படும்.

சோதனை செய்யப்பட்ட விநியோக ஊழியர்களில் மொத்தம் 22 பேர் பணி வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள். அவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு உணவு, ஆவணங்கள், ஆய்வகப் பொருள்கள், மூக்குக் கண்ணாடிகள் போன்ற பொருள்களை விநியோகம் செய்தனர்.

விநியோகம் செய்யும் போது சில விநியோக ஊழியர்கள் தங்கள் சொந்த போக்குவரத்தைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் அடங்கும் என்றும் அவை சட்டபூர்வமானவை என்றும் அமைச்சு கூறியது.

சட்டவிரோதமாக செயல்படும் இடங்களில் வழக்கமான சோதனைகளை நடத்த மனிதவள அமைச்சு, தேசிய உணவு விநியோக ஊழியர்கள் சங்கத்துடன் இணைந்து செயல்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக விநியோகிப்பு வேலை செய்யும் வெளிநாட்டினரைப் பற்றி புகாரளிக்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்