ஃபேர்பிரைசில் $50 செலவிட்டால் $4 பற்றுச்சீட்டு கிடைக்கும்

ஃபேர்பிரைசில் $50 செலவிட்டால் $4 பற்றுச்சீட்டு கிடைக்கும்

1 mins read
c5f4541c-be3d-4336-8dd5-42b184f85bc4
சலுகை மூலம் கிடைக்கும் பற்றுச்சீட்டை அக்டோபர் மாதம் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஃபேர்பிரைஸ் குழுமம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ஒரே பரிவர்த்தனையில் 50 வெள்ளி செலவு செய்தால் அவர்களுக்கு 4 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டு வழங்கப்படும்.

இந்தச் சலுகை அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9 வரை இருக்கும்.

ஃபேர்பிரைஸ் குழுமத்திற்கு கீழ் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள், ஃபேர்பிரைஸ் பைனஸ்ட் ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா, யூனிட்டி கடைகளில் இச்சலுகையை வாடிக்கையாளர்கள் பெறமுடியும்.

சாங்கி விமான நிலையத்தில் உள்ள யூனிட்டி கடையில் மட்டும் இச்சலுகை வழங்கப்படாது.

சலுகை மூலம் கிடைக்கும் பற்றுச்சீட்டை அக்டோபர் மாதம் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கடந்த ஜனவரி மாதம் ஃபேர்பிரைஸ் குழுமம் இதேபோன்ற சலுகையை அறிவித்திருந்தது. ஃபேர்பிரைஸ் குழுமத்திற்கு கீழ் உள்ள பேரங்காடிகளில் 80 வெள்ளி சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுகளை (சிடிசி) ஒரே பரிவர்த்தனையில் செலவிட்டவர்களுக்கு 8 வெள்ளி பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்