சிங்கப்பூரில் விற்கப்பட்ட புதிய கார்களில் 40% மின்சாரக் கார்கள்

1 mins read
d704b3a6-263c-4adb-a5d4-56b98cd583a2
சிங்கப்பூரில் இவ்வாண்டு பதிவுசெய்யப்பட்ட கார்களில் 40 விழுக்காடு மின்சாரக் கார்கள் - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரில் மின்சாரக் கார்களுக்கான பதிவுகள் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் கணிசமாக உயர்ந்துள்ளன.

பதிவுசெய்யப்பட்ட மொத்த கார்களில் 4,383 அதாவது 40 விழுக்காடு மின்சாரக் கார்கள்.

கடந்த ஆண்டு மின்சாரக் கார்களுக்குச் செய்யப்பட்ட மொத்த பதிவுகள் 33.6 விழுக்காடு. 2023ஆம் ஆண்டில் அது 18.1 விழுக்காடாக இருந்தது.

இவ்வாண்டு பதிவுசெய்யப்பட்ட மின்சாரக் கார்களில் 2,183 சீனாவின் பிவய்டி (BYD) நிறுவனத்தைச் சேர்ந்தவை. அது ஒட்டுமொத்த கார் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஐந்தில் ஒரு புது கார் பிவய்டி நிறுவனத்திலிருந்து வந்தது.

இரண்டாம் இடத்தில் டெஸ்லா நிறுவனமும் மூன்றாம் இடத்தில் பிஎம்டப்பிள்யூ நிறுவனமும் வந்தன.

ஆக மொத்தம் 34 கார் நிறுவனங்கள் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் மின்சாரக் கார்களைப் பதிவுசெய்தன. கடந்த ஆண்டும் பதிவு செய்த நிறுவனங்களின் எண்ணிக்கையில் பெரியளவில் மாற்றம் இல்லை.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பெங் (Xpeng) நிறுவனம் 190 மின்சாரக் கார்களைப் பதிவுசெய்து நான்காம் இடத்தில் வந்தது. கடந்த ஆண்டு அது 7ஆம் இடத்தில் இருந்தது.

மின்சாரக் கார்களுக்கான சலுகைகளால் அவற்றின் பயன்பாடு அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மின்சாரக் கார்களுக்கு $40,000 வரி விலக்கு வழங்கப்படுவதோடு பசுமையான பெட்ரோல்-ஹைபிரிட் கார்களுக்கு $5,000 வரையிலான மானியம் வழங்கப்படும்.

தற்போதைய சலுகைகள் இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.

குறிப்புச் சொற்கள்