குடித்துவிட்டு விரைவுச்சாலையில் கார் ஓட்டிச் சென்று தூங்கிய ஆடவர்

குடித்துவிட்டு விரைவுச்சாலையில் கார் ஓட்டிச் சென்று தூங்கிய ஆடவர்

1 mins read
cbeec41b-8a87-403b-9e4f-c15d03cb6133
மூவர் மீண்டும் குற்றம் புரிந்தவர்கள். - கோப்புப் படம்: ஊடகம்

சிங்கப்பூரில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 41 வாகன ஓட்டுநர்கள் மீது வியாழக்கிழமை (அக்டோபர் 24) குற்றம் சுமத்தப்பட உள்ளது.

அந்தக் குற்றங்கள் இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடையில் நிகழ்ந்தவை என காவல்துறை தெரிவித்து உள்ளது.

அந்த 41 பேரில் மூவர் மீண்டும் குற்றம் புரிந்தவர்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

மேலும், குற்றம் சுமத்தப்பட உள்ளோரில் 29 வயது ஆடவர் மத்திய விரைவுச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றத்தையும் எதிர்நோக்குகிறார்.

விரைவுச்சாலையில் பழுதான, அவசரநிலை வாகனங்களுக்கான சாலை ஓரப் பகுதியில் (Road shoulder) காரை நிறுத்தியதன் மூலம் இதர வாகன ஓட்டுநர்களுக்கு இடைஞ்சல் விளைவித்த குற்றம் அது.

குடித்துவிட்டு காரை ஓட்டிச் சென்ற அந்த ஆடவர், பின்னர் காருக்குள்ளேயே தூங்கியது விசாரணையில் தெரியவந்தது.

அந்தக் குற்றத்திற்கு $2,000 வரையிலான அபராதமும் மூன்று மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றத்திற்கு $2,000 முதல் $10,000 வரை அபராதமும் 12 மாதம் வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றத்தை மீண்டும் செய்பவருக்கு அபராதத்துடன் சிறைத் தண்டனை இரட்டிப்பாகும்.

குறிப்புச் சொற்கள்