மோசடிகள் தொடர்பில் 412 பேரிடம் விசாரணை

மோசடிகள் தொடர்பில் 412 பேரிடம் விசாரணை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Sep 2023 - 7:43 pm

1 mins read

பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 412 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அவர்கள், முதலீடு,, இணையவழி வணிகம், ஆள்மாறாட்டம், வேலை, இணையக் காதல் போன்றவை தொடர்பான 1,600க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த மோசடிகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் $10 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை இழந்ததாகக் கூறப்பட்டது.

இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை மேற்கொண்ட நடிவடிக்கைகள் மூலம், மோசடிகளில் ஈடுபட்டதன் சந்தேகத்தின்பேரில் 15 முதல் 78 வயதுக்குட்பட்ட 295 ஆண்களிடமும்117 பெண்களிடமும் விசாரித்து வருவதாகக் காவல்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
குற்றம்தண்டனைஅபராதம்மோசடி