தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் தொழில், சூதாட்டம் தொடர்பில் 44 பேர் கைது

1 mins read
f37dd9d3-8079-4b34-aae6-8094ff614df8
தீவு முழுவதும் 44 பேர் கைது செய்யப்பட்டனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாலியல் தொழில், சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் கேலாங்கில் 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேலாங் லோரோங் 23க்கு அருகே உள்ள உணவு நிலையத்தில் அவர்கள் கைதாகினர்.

மே 29ஆம் தேதி அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் 42 பேர் சிக்கியதாகவும் அவர்கள் 25 வயது முதல் 63 வயது உள்ளவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்தது.

கேலாங் ரோட்டில் உள்ள ஹோட்டலில் மற்றொரு 50 வயது நபர் கைது செய்யப்பட்டார். அவர் பாலியல் சேவைகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. சட்டவிரோத சூதாட்டங்களை நடத்தியதற்காக 49 வயது மாதும் கைது செய்யப்பட்டார். இருவரும் உணவு நிலையத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோத சூதாட்டங்களில் ஈடுபடுவோருக்கு $500,000 அபராதம், ஏழாண்டு சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பாலியல் தொழில் குற்றச்செயலுக்கு $100,000 வரை அபராதம், ஐந்தாண்டுகள் சிறை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்