வீவக திட்டத்திற்கு 46 போலி ஒப்பந்தப் புள்ளிகள்: மூவர்மீது குற்றச்சாட்டு

வீவக திட்டத்திற்கு 46 போலி ஒப்பந்தப் புள்ளிகள்: மூவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு நான்காண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
1a17efc7-139f-4f05-b489-6c498d992524
சூரியன் மறையும் நேரத்தில் புக்கிட் பாஞ்சாங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள். கடந்த 2025ல் மே மாதம் எடுக்கப்பட்ட படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத் திட்டம் ஒன்றுக்கு நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளைப் போலியாகத் தயாரித்ததற்காக இரு ஆடவர், ஒரு பெண் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

அந்த இரண்டு ஆடவர்களில் 47 வயதானவர் வீவகவால் ஒரு திட்டத்திற்காக 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை குத்தகையாளராக நியமிக்கப்பட்ட நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் ஆவார்.

அந்தக் குத்தகை நிறுவனம் இயந்திர வேலைகளுக்காக அமர்த்தப்பட்டது. அதில் பணியாற்றிய 39 வயது ஆடவரும் 38 வயது பெண்ணும் அந்த மேலாளர் தூண்டுதலின்பேரில் 46 போலி ஒப்பந்தப்புள்ளிகளைத் தயாரித்துள்ளனர் என்று காவல்துறை கூறியது.

மூவரும் மோசடிக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகின்றனர். ஒரு குத்தகை நிறுவனத்தின் ஊழியரை இரு ஒப்பந்தப்புள்ளிகளை அவரது நிறுவனம் தயாரித்தது என்று வீவகவிடம் பொய்யுரைக்குமாறு அந்த மாது கேட்டுக்கொண்டுள்ளார். எனவே அந்தப் பெண்மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றவாளிக்கும் நான்காண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

கூடுதல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த மாதுக்கு இரண்டு ஆண்டு சிறை, அபராதம் அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்