ஃபோர்ப்ஸ் (Forbes) நிறுவனத்தின் உலகப் பெருஞ்செல்வந்தர்கள் (பில்லியனர்) பட்டியலில் 49 சிங்கப்பூரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அந்தப் பட்டியலில் 39 சிங்கப்பூரர்கள் இருந்தனர்.
சாயத் தொழில் ஜாம்பவான் கோ செங் லியாங் உலகப் பெருஞ்செல்வந்தர்கள் பட்டியலில் 182வது இடத்தில் உள்ளார்.
நிப்பான் பெயின்ட் நிறுவனத்தில் அதிக பங்குகளைக் கொண்ட திரு கோவின் சொத்து மதிப்பு 13 பில்லியன் அமெரிக்க டாலர்.
சுகாதாரப் பொருள்களைத் தயாரிக்கும் ‘மைன்ட்ரே’ நிறுவனத்தின் லி ஸிட்டிங் 185வது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 12.8 பில்லியன் அமெரிக்க டாலர்.
தொழில்நுட்ப வர்த்தகர் ஃபாரஸ்ட் லை 347வது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 8.6 பில்லியன் அமெரிக்க டாலர்.
தற்போதைய உலகப் பெருஞ்செல்வந்தர்கள் பட்டியலில் உள்ள 49 சிங்கப்பூரர்களின் சொத்து மதிப்பு 195 பில்லியன் வெள்ளி. 2024ஆம் ஆண்டு அது 155 பில்லியன் வெள்ளி.

