கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் பெண் சைக்கிளோட்டி ஒருவர் கார் மீது ஏறி ஓட்டுநருடன் சண்டையிட்டார்.
அதுதொடர்பாக நடத்தப்பட்ட வழக்கில் அவருக்கு 5 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனை குறுகியகாலத் தடுப்புக் காவல் ஆணைக்கு கீழ் விதிக்கப்பட்டது. அதனால் அப்பெண்ணின் விவரங்கள் குற்றவியல் பதிவுகளில் இருக்காது.
நிகோலெட் டான் சி யென் என்னும் 33 வயது பெண், குற்றம் செய்த போது வழக்கறிஞராக இருந்தார். நிகோலெட், 49 வயது ஓட்டுநர் எலைன் மைக்கல் ஓவை அச்சுறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிகோலெட் ஏப்ரல் மாதம் ஒப்புக்கொண்டார். நிகோலெட் சாலையில் செய்த பிரச்சினை சமூக ஊடகங்களில் பலரால் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சாலையில் கவனமில்லாமல் காரை ஓட்டியதற்காக எலைன் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது.
சமையல் ஆசிரியரான எலைன் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை பிப்ரவரி மாதம் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு விரைவில் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சாலையில் நிகோலெட் சைக்கிளோட்டிச் சென்றுகொண்டிருந்தபோது எலைன் வேகமாகவும் நெருக்கமாகவும் நிகோலெட் அருகே சென்றார். அதனால் இரு பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனையாக மாறியது.