தெம்பனிஸ் குடியிருப்பில் தீ; 5 பேர் மருத்துவமனையில்

தெம்பனிஸ் குடியிருப்பில் தீ; 5 பேர் மருத்துவமனையில்

1 mins read
474d4313-3f3c-46b8-85eb-3e3cf6fe17c0
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தெம்பனிஸ் குடியிருப்பு வட்டாரத்தில் ஏற்பட்ட தீச் சம்பவத்தைத் தொடர்ந்து 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைத் தெரிவித்தது.

காலை 8:35 மணிவாக்கில் தெம்பனிஸ் புளோக் 645பி ஸ்டீரிட் 62இல் தீச் சம்பவம் ஏற்பட்டதாக அதிகாரிகளுக்குத் தகவல் வந்ததாகக் குடிமைத் தற்காப்பு படை குறிப்பிட்டது.

தீ 13ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்டதாகவும் அது தீயணைப்பு கருவிகள் கொண்டு அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் செல்வதற்கு முன்னரே அந்த வீட்டில் இருந்தவர்களும் அக்கம் பக்கத்தினரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நான்கு பேரும் கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனையில் ஒருவரும் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மின் சாதனங்களிலிருந்து தீப்பிடித்திருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்