போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஐவரை புதன்கிழமை கைது செய்ததாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு $507,000 இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் 19க்கும் 23க்கும் இடைப்பட்ட வயதினர்.
அவர்களிடமிருந்து 751 கிராம் ‘ஐஸ்’, 5.487 கிலோகிராம் கஞ்சா, 63 கிராம் ‘ஹெராயின்’ உள்ளிட்ட போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்றும் அவை 1,240 போதைப் புழங்கிகள் ஒரு வாரம் உட்கொள்வதற்குப் போதுமானது என்றும் சிஎன்பி கூறியது.
கைது செய்யப்பட்டவர்களிடம் சிஎன்பி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.