மே தினத்தை முன்னிட்டு ஃபேர்பிரைஸ் நிறுவனம் என்டியுசி, லிங்க் உறுப்பினர்களுக்குச் சிறப்புச் சலுகை வழங்கவிருக்கிறது.
அதன்படி குறிப்பிட்ட சில பொருள்களின் விலையில் 50 விழுக்காடு தள்ளுபடி தரப்படும். இம்மாதம் (ஏப்ரல்) 30ஆம் தேதியிலிருந்து மே 17ஆம் தேதிவரை அவர்கள் சலுகை விலையில் அந்தப் பொருள்களை வாங்கலாம்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெவ்வேறு பொருள்களுக்குத் தள்ளுபடி கொடுக்கப்படும். அந்தப் பொருள்களை நேரடியாக வாங்கினாலும் இணையம் மூலம் பெற்றாலும் சலுகை கிடைக்கும்.
பயனீட்டாளர்கள் தள்ளுபடியைப் பெற, லிங்க் ரிவார்ட்ஸ் அல்லது என்டியுசி அட்டையைக் காண்பிக்க வேண்டும் அல்லது ஃபேர்பிரைஸ் குழுமத்தின் (எஃப்பிஜி) செயலியின் வழியாகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
உலக அளவில் எரிசக்திக் கட்டமைப்புகளும் விநியோக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் விலைவாசி கூடிவருகிறது.
இந்நிலையில், அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படியாக வைத்திருக்க வேண்டும் என்ற குழுமத்தின் பரந்த நோக்கங்களில் அண்மைச் சலுகையும் ஒன்று என ஃபேர்பிரைஸ் நிறுவனம் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

