வேலையிலிருந்து அவ்வப்போது ஓய்வுபெற பணக்கார சிங்கப்பூரர்களில் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் விரும்புவதாக எச்எஸ்பிசி ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உலகளாவிய சராசரியுடன் ஒப்பிடும்போது இது அதிகம்.
சிறு சிறு இடைவேளைகளாகப் பலமுறை வேலையிலிருந்து ஓய்வுபெற அவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இம்சோஸ் ஏஷியா நடத்திய இந்த ஆய்வில் 12 துறைகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட பணக்கார சிங்கப்பூரர்கள் ஆய்வில் பங்கெடுத்தனர்.
ஒவ்வொருவரின் முதலீடு செய்யக்கூடிய சொத்தின் மதிப்பு 100,000 அமெரிக்க டாலரிலிருந்து 2 மில்லியன் அமெரிக்க டாலர் வரை ஆகும்.
தங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு, குடும்பத்தின் நலன் போன்றவற்றில் கவனம் செலுத்த திட்டமிட்டு வேலையிலிருந்து சிறிது காலம் ஓய்வுபெற இவர்கள் விரும்புகின்றனர். இது சில மாதங்களிலிருந்து சில ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.
இதுபோன்று அவ்வப்போது பணி ஓய்வுபெற 701 பணக்கார சிங்கப்பூரர்கள் பேரளவில் விருப்பம் தெரிவித்தனர்.
இருப்பினும், இதுபோன்ற பணி ஓய்வுகளுக்குத் திட்டமிட்டு பிறகு மீண்டும் வேலைக்குத் திரும்புவது சாத்தியம் என்று அவர்களில் 62 விழுக்காட்டினர் மட்டுமே நம்பிக்கையுடன் உள்ளனர்.
வேலையிலிருந்து அவ்வப்போது எடுக்கப்படும் ஓய்வுக்காலங்களின்போது முதலீடுகளிலிருந்து பெறப்படும் வருமானத்தையும் சேமிப்பையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் பணி ஓய்வுபெற்று வசதியுடன் வாழ சராசரியாக US1.39 மில்லியன் தேவைப்படுவதாக ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பங்கெடுத்த பணக்கார முதலீட்டாளர்கள் தெரிவித்தனர். உலகளாவிய சராசரியான US 1.05 மில்லியனைவிட இது அதிகம்.

