தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

52 பள்ளிகளுக்குப் புதிய தலைமை ஆசிரியர்கள்

1 mins read
28332a99-db0f-47a8-9a5a-644bfdd2c983
புதிய தலைமை ஆசிரியரைப் பெறும் நான்கு தொடக்கக் கல்லூரிகளில் ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரியும் ஒன்று. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அடுத்த ஆண்டு புதிய பள்ளியாண்டு தொடங்கும்போது 52 பள்ளிகள் புதிய தலைமை ஆசிரியர்களைப் பெற்றிருக்கும்.

கல்வி அமைச்சு ஆண்டுதோறும் நடத்தும் தலைமை ஆசிரியர்களை இடமாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக அது அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.

கத்தோலிக்கத் தொடக்கக் கல்லூரி, ஹுவா சொங் கல்விநிலையம், நன்யாங் தொடக்கக் கல்லூரி, ராஃபிள்ஸ் கல்விநிலையம் ஆகிய நான்கு தொடக்கக் கல்லூரிகளும் அவற்றில் அடங்கும்.

தலைமை ஆசிரியர்கள் 15 பேர் முதல்முறையாக அப்பதவியை ஏற்பார்கள் என்று கல்வி அமைச்சு கூறியது.

தலைமை ஆசிரியர்கள் நியமனம் மற்றும் இடமாற்றச் செயல்முறை மூலமாக, புதிய கண்ணோட்டங்களால் பள்ளிகள் பலனடையும் என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

அத்துடன், அனுபவமிக்க தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளிடையே ஆகச் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்றும் அது குறிப்பிட்டது.

தலைமை ஆசிரியர்கள் பத்துப் பேர் இவ்வாண்டு இறுதிக்குள் ஓய்வுபெறுவார்கள் அல்லது தங்களின் மறுவேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை முடித்துக்கொள்வார்கள் என்றும் அமைச்சு அறிவித்தது.

டிசம்பர் 28ஆம் தேதி நடைபெறவிருக்கும் வருடாந்திர நியமன, பாராட்டு விழாவின்போது அமைச்சு தலைமை ஆசிரியர்களை நியமிக்கும்.

அப்போது, ஓய்வுபெறும் தலைமை ஆசிரியர்கள், முன்னதாகத் தலைமை ஆசிரியர்களாகப் பணியாற்றிய கல்வி அமைச்சின் தலைமையகத்தைச் சேர்ந்த மூத்த கல்வி அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்பை அமைச்சு அங்கீகரிக்கும்.

குறிப்புச் சொற்கள்