பொங்கோல் வீட்டில் தீ: 55 பேர் வெளியேற்றப்பட்டனர்

1 mins read
d77465b8-0faa-4bd3-9caf-5ace9178d1e0
படம்: சாவ்பாவ் வாசகர் -

பொங்கோல் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றில் சனிக்கிழமை காலை தீ மூண்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 55 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

பொங்கோல் டிரைவ் புளோக் 641Aல் உள்ள இரண்டாவது மாடி வீட்டில் தீ மூண்டது. அது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு காலை 11.10 மணிக்கு அழைப்பு கிடைத்தது.

தீயணைப்பாளர்கள் அங்கு வருவதற்கு முன்பே, பாதிக்கப்பட்ட புளோக்கில் வசித்த கிட்டத்தட்ட 55 பேர் வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீ மூண்டதற்கு மின்சாரக் கோளாறு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.