ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வழங்கீட்டுத் தொகையைப் பயன்படுத்திய 560,000 பேர்

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வழங்கீட்டுத் தொகையைப் பயன்படுத்திய 560,000 பேர்

1 mins read
bb56d60e-1ade-4e2b-9bcd-3020583945b9
படம்: LIANHE ZAOBAO -

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வழங்கீட்டுத் தொகையைப் பயன்படுத்திய 560,000 பேர்

அமைப்பின் ஆதரவில் நடைபெற்ற திட்டங்களில் கடந்த ஆண்டில் ஏறத்தாழ 560,000 பேர் பங்கெடுத்தனர்.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வழங்கீட்டுத் தொகையைப் பயன்படுத்திய 192,000க்கும் மேற்பட்டோரும் இதில் அடங்குவர்.

2021ஆம் ஆண்டில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் ஆதரவில் நடைபெற்ற திட்டங்களில் மொத்தம் 660,000 பேர் பங்கெடுத்தனர்.

தகுதிபெற்ற பயிற்சிகளுக்கு ஸ்கில்ஸ்பியூச்சர் வழங்கீட்டுத் தொகையைப் பயன்படுத்திய ஏறத்தாழ 247,000 பேரும் இதில் அடங்கும். எனவே, 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் பங்கெடுத்தோர் எண்ணிக்கை குறைவு.

கொவிட்-19 நெருக்கடிநிலையைச் சமாளித்து அதைக் கடந்து செல்ல சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் 2021ஆம் ஆண்டில் பல பயிற்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவ்வாண்டில் ஆக அதிகமான தனிநபர்கள், நிறுவனங்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் ஆதரவில் நடைபெற்ற பயிற்சித் திட்டங்களில் பங்கெடுத்தனர்.

எனவே, 2021ஆம் ஆண்டைவிட கடந்த ஆண்டில் பயிற்சித் திட்டங்களில் பங்கெடுத்தோர் எண்ணிக்கை சரிந்தது எதிர்ப்பார்க்கப்பட்டதொன்று என்று தெரிவிக்கப்பட்டது.