மூன்று சிறுவர்களை மானபங்கம் செய்த 58 வயது ஆடவர்

1 mins read
70bf8d24-4848-4440-a9c0-2725066bb67d
பணிப்பெண் உள்ளிட்ட இரு பெண்களை ஆடவர் தாக்கிக் காயப்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. - கோப்பு படம்: இணையம்

சிங்கப்பூரில் ஆடவர் ஒருவர் ஐந்தாண்டு காலத்தில் மூன்று சிறுவர்களை மானபங்கம் செய்ததோடு இரு பெண்களைக் காயப்படுத்தியும் உள்ளார்.

அந்தப் பெண்களில் அவரது தாயாரின் பணிப்பெண்ணும் அடங்குவார்.

நான்காவதாக ஒரு சிறுவனை மானபங்கம் செய்ய முயன்ற ஜுலியன் லோ ஷெயுங் ஜின் எனப்படும் அந்த 58 வயது ஆடவர் காவல்துறையிடம் சிக்கினார்.

பொது இடத்தில் ஆபாசமாக நடந்துகொண்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் ஈடுபட்ட குற்றச்செயல்கள் 2019ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை நீடித்தன.

தற்போது விசாரணைக் காவலில் உள்ள லோ, திங்கட்கிழமை (அக்டோபர் 21) தம் மீது சுமத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

மானபங்கக் குற்றங்களும் தாக்குதல் குற்றங்களும் அவற்றுள் அடங்கும்.

மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் கொள்ளப்படும்.

குற்றவாளிக்கு 10 மாதம், ஒன்பது வார சிறைத் தண்டனை விதிக்குமாறு அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இலேசான அறிவுத்திறன் குறைபாட்டுக்காக அந்த ஆடவர் சிகிச்சை எடுத்துக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

1989ஆம் ஆண்டு மனநலக் கழகத்தில் உளவியல் பராமரிப்பை அவர் பெறத் தொடங்கியதாகவும் தகவல் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்