நாடாளுமன்ற நாயகராக மீண்டும் ஹலிமா யாக்கோப்

நாடாளுமன்ற நாயகராக மீண்டும் ஹலிமா யாக்கோப்

1 mins read
4a69274b-a092-420a-b2bf-e76f5a59572f
-

இம்மாதம் 15ஆம் தேதி தொடங் கும் புதிய நாடாளுமன்றத்தில் மேலும் பல புதிய அம்சங்கள் இடம்பெறவுள்ளன. ஆனால், அதன் நாயகர் பொறுப்பை ஏற் பவர் பழக்கப்பட்ட முகமாகவே இருப்பார். முன்னைய நாடாளுமன்றத் தின் நாயகராகச் செயல்பட்ட திருவாட்டி ஹலிமா யாக்கோப் தொடர்ந்து அந்தப் பொறுப்பை வகிப்பார். 2013 ஜனவரியில் நாடாளுமன்ற நாயகராகப் பெறுப் பேற்ற திருவாட்டி ஹலிமா, 15ஆம் தேதியன்று பிரதமர் லீ சியன் லூங்கால் மீண்டும் நிய மிக்கப்படுவார்.

நாடாளுமன்றக் கூட்டங்கள் முறையாக நடப்பதை உறுதிப்படுத்தும் நாயகர், மன்ற விவாதங்களில் பங்கேற்க முடியாது. ஆனால், மசோதா தொடர்பான விவாதங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வாக்களிக்கலாம்.