ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தலைமை அர்ச்சகராகப் பணியாற்றியபோது கந்தசாமி சேனாபதி கோயில் நகைகளைச் சட்டவிரோதமாக அடமானம் வைத்துள்ளார்.

நம்பிக்கையின் அடிப்படையில் கிட்டத்தட்ட 1 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள கோயில் நகைகள் சேனாபதியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர் அந்த நகைகளை பலமுறை அடமானம் வைத்து கிட்டத்தட்ட 2.3 மில்லியன் வெள்ளியைக் கையகப்படுத்தியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த 39 வயது சேனாபதிக்கு செவ்வாய்க்கிழமை (மே 30) ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்து அறக்கட்டளை வாரியத்திற்கு கீழ் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சேனாபதி 2013ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தார். 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு தலைமை அர்ச்சகராகப் பதவி உயர்வு கிடைத்தது. 

2014ஆம் ஆண்டு முதல் கோயில் நிர்வாகம்  1.1 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 255 தங்க நகைகளை அவரது பொறுப்பில் ஒப்படைத்தது.

முக்கியமான நாள்களில் கோயிலில் பூசைகள் நடக்கும்போது அந்த நகைகள் ஆலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு அணிவிக்கப்படும். 

சேனாபதி 2016ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடையில் 66 தங்க நகைகளை 172க்கும் மேற்பட்ட முறை அடமானம் வைத்துள்ளார். அக்காலகட்டத்தில் மட்டும் அவர் 2,328,760 வெள்ளியை அடமானத் தொகையாகப் பெற்றார்.  

நகைகள் தொடர்பில் ஆலய நிர்வாகம் கணக்குத் தணிக்கை பார்க்கும்போதெல்லாம் அடமானம் வைத்த நகைகளை சேனாபதி மீட்பார். 

2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆலய நிர்வாகம் நகைகளை கணக்குத் தணிக்கை பார்க்க திட்டமிட்டது. அப்போது அவர் நகைகளை அடமானம் வைத்ததை ஒப்புக்கொண்டார். 

அதன் பின்னர் ஜூலை 29ஆம் தேதியன்று சேனாபதி மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.

அர்ச்சகர் தான் அடமானம் வைத்த 66 நகைகளையும் ஒப்படைத்துவிட்டார், அதில் கோயில் நிர்வாகத்திற்கு எந்த நட்டமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!