64 உள்ளூர் பாம்பினங்கள் உள்ளன; சாலை விபத்து அவற்றுக்கு எமனாக உள்ளது

1 mins read
050a873a-e423-4d81-a7c1-3fa99f70f9cb
உள்ளூர் பாம்பினங்கள் சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு மிகவும் முக்கியமானவை என்று எச்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் திரு கமலகண்ணன் ராஜா தெரிவித்தார். - படங்கள்: லா பிரதர்ஸ், கண்ணன் ராஜா, சிவராம் ராசு, ராபின் டான்

சிங்கப்பூருக்கே சொந்தமான 643 பாம்பினங்கள் உள்ளன.

ஆனால் சாலைகளில் ஊர்ந்து செல்லும்போது பல பாம்புகள் வாகனம் மோதி மடிகின்றன.

2021ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வாகனம் மோதி 499 பாம்புகள் சாலைகளில் மாண்டு கிடந்தன.

அதே காலகட்டத்தில் 152 பல்லிவகை விலங்குகளும் 115 நிலநீர் வாழ் விலங்குகளும் 27 ஆமைகளும் சாலைகளில் மாண்டு கிடந்தன.

பாம்புகள் சாலைகளில் மாண்டு கிடப்பதைக் கண்டால் அதை உடனடியாகப் படமெடுத்து இணையப் படிவம் வாயிலாகப் புகார் செய்யுமாறு பொதுமக்களிடம் எச்எஸ்எஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

சாலைகள் அதிக சூரிய வெப்பத்தை உள்வாங்குவதால் பாம்புகள் வெப்பம் தேடி அவற்றை நாடிச் செல்வதாகக் கூறப்படுகிறது.

மற்ற விலங்குகளைவிட மலைப்பாம்பு, நாகப் பாம்பு ஆகியவை பெரிதாக இருப்பதாகவும் அவை வாகனம் மோதி சாலைகளில் மாண்டு கிடக்கும்போது அவை எளிதில் கண்ணில் படும் என்றும் எச்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் திரு கமலகண்ணன் ராஜா கூறிலார்.

உள்ளூர் பாம்பினங்கள் சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு மிகவும் முக்கியமானவை என்றார் அவர்.

உதாரணத்துக்கு, எலிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க மலைப்பாம்புகள் பெரிதும் உதவுவதாக திரு ராஜா கூறினார்.

உள்ளூர் பாம்பினங்களில் 27 பாம்பினங்கள் அருகி வரும் விலங்கினத்தைச் சேர்ந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்