பாசிர் ரிஸில் திங்கட்கிழமை (ஏப்ரல் 10) காலை கோ அஹெட் பேருந்து மோதி 65 வயது சைக்கிளோட்டி மாண்டார்.
விபத்தில் மாண்டவர் துப்புரவு ஊழியர். அவர் வேலைக்குச் சென்றபோது விபத்தில் சிக்கியதாகக் கூறப்பட்டது.
பாசிர் ரிஸ் டிரைவ் 3 மற்றும் பாசிர் ரிஸ் சென்ட்ரல் சந்திப்பில் அவ்விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் சிக்கிய ஆடவர் உடனடியாக சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்து தொடர்பாக ஏப்ரல் 10ஆம் தேதி காலை 7:20 மணிக்கு தங்களுக்கு தகவல் வந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
விபத்து தொடர்பான விசாரணையில் 45 வயது பேருந்து ஓட்டுநர் உதவி வருகிறார்.


