மார்சிலிங் கிரசென்ட்டில் 37 வயது ஆடவரைக் கொல்ல முற்பட்ட 65 வயது ஆடவர் கைது

மார்சிலிங் கிரசென்ட்டில் 37 வயது ஆடவரைக் கொல்ல முற்பட்ட 65 வயது ஆடவர் கைது

1 mins read
08be10db-cb12-4e7a-bc52-cca24b1400d4
-

மார்சிலிங் கிரசென்ட்டில் 37 வயது ஆடவர் ஒருவரைக் கொலை செய்ய முற்பட்டதற்காக சந்தேகத்தின் பேரில் 65 வயது ஆடவர் ஒருவர் புதன்கிழமை (டிசம்பர் 28) இரவு கைது செய்யப்பட்டார்.

மார்சிலிங் கிரசென்ட்டில் உதவி தேவைப்படுவதாக இரவு 10.10 மணியளவில் தனக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்தது.

சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், அந்த 37 வயது ஆடவர் தீக்காயங்களுடன் இருந்ததைக் கண்டறிந்தனர்.

சுயநினைவுடன் இருந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதன் தொடர்பில் அந்த 65 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

கொலை செய்ய முற்பட்டதன் தொடர்பில் அந்தச் சந்தேக ஆடவர் மீது வெள்ளிக்கிழமை (டிசம்பர் 30) குற்றஞ்சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனையும் பிரம்படியும் அல்லது 20 ஆண்டு வரை சிறைத்தண்டனையோ பிரம்படியோ அல்லது இரண்டும் விதிக்கப்பட்டலாம்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணை தொடர்கிறது.