தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காரில் இறந்து கிடந்த 65 வயது முதியவர்

1 mins read
b72037cd-8954-4149-b2d9-80de0ee762ce
முதற்கட்ட விசாரணையில் ஆடவரின் மரணத்தில் சூது இல்லை என நம்பப்படுகிறது. படம்: ஷின் மின் -
multi-img1 of 2

ஈசூனில் உள்ள கார்ப்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் 65 வயது முதியவர் ஒருவர் புதன்கிழமை (ஏப்ரல் 12) இறந்துகிடந்தார். அவர் இறந்து ஐந்து மணி நேரமாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இச்சம்பவம் பற்றி மாலை 6.04 மணிக்குத் தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் ஈசூன் ஸ்திரீட் 21, புளோக் 233க்குச் சென்றனர்.

அப்போது அவரைச் சோதித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவரது மரணத்தில் சூது இருக்காது என நம்பப்படுகிறது.

காரில் ஒருவர் அசைவற்றுக் கிடந்ததைத் கண்டு வழிப்போக்கர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக ஷின் மின் தகவல் தெரிவித்தது.

கார் கதவு திறந்த நிலையில் இருந்தது. அந்த வழிப்போக்கர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.